search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்த் கிதாம்பி"

    மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி நம்பர் ஒன் வீரரிடம் தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார்.
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.

    8 முறை தொடர்ந்து கென்டோவிடம் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த் இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அந்த செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 9-21 என எளிதாக இழந்து தோல்வியடைந்தார்.

    இந்த தோல்வியின் மூலம் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக 9-வது முறை கென்டோவிடம் தோல்வியடைந்துள்ளார்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியோடு வெளியேறினார்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-7, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்தி கிதாம்பி இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 18-1, 19-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #PVSindhu #SrikanthKidambi
    சீனா ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து தாய்லாந்தின் புஸனன் ஒங்பாம்ரங்பனை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்து காலிறுதியில் ஹெ பிங்ஜியாவோ-வை எதிர்கொள்கிறார். பிவி சிந்து அவரை எதிர்த்து விளையாடிய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.

    ஸ்ரீகாந்த் கிதாம்பி டாமி சுகியார்ட்டோவை எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-9 எனவும், 3-வது செட்டை 21-9 எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் சீன தைபே-யின் சோயு தியென் சென்-ஐ எதிர்த்து விளையாடுகிறார்.
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #ChinaOpen
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கார்வீயை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்ட்டோவை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டியும் தோல்வியடைந்தார்.
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #ChinaOpen2018
    சீனா ஓபன் பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.

    ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



    கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபனில் கென்டோ மொமோட்டா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #ChinaOpen2018
    சீனா ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்தின் சுபன்யு அவிகிங்சனனை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12 எனவும், 2-வது செட்டை சுபன்யு 21-15 எனவும் கைப்பற்றினார்.



    வெற்றிக்கான 3-வது செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 24-22 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் முன்னணி வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை பிவி சிந்து முதல் 10 இடத்திற்குள் நீடிக்கின்றனர். #Srikanth #PVSindhu
    பேட்மிண்டன் உலக பெடரேசன் நேற்று வீர்ரகள் மற்றும் வீராங்கனைகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் வீரர்களுக்கான தரவரிசயில் ஸ்ரீகாத் கிதாம்பி 63835 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஆசிய விளையாட்டில் சோபிக்கா விடிலும் 10 இடத்திற்குள் நீடிக்கிறார்.

    டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிவி சிந்து 85414 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தைவானின் தாய் சு யிங் 98317 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜப்பானின் அகானே யமகுச்சி 87743 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சாய்னா நேவால் 58014 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பேட்மிண்டன் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங் காங்கின் கி வின்சென்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் 6-ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பிக்கு ஹாங் காங் வீரர் கடும் சவாலாக விளங்கினார்.



    இதனால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே சென்றது. இறுதியில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-23 என இழந்தார். 2-வது செட்டையும் 19-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார். ஹாங் காங் வீரர் 40 நிமிடத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பியை வீழ்த்தினார்.
    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.

    இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #MalaysiaOpen2018
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டேஸை எதிர்கொண்டார்.



    இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் கிதாம்பி 22-18, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 11-ம் நிலை வீரரான கென்டோ மோமொட்டாவை எதிர்கொள்கிறார்.
    எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசத்தில் திளைக்கிறார். #MSDhoni
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் எம்எஸ் டோனி அணியும் 7-ம் எண் ஜெர்ஸியில் வீரர்கள் கையெழுத்திட்டு வழங்கியது. இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசம் அடைந்தார்.



    இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.



    இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×